உலக நடைமுறையில் பல மாற்றங்கள் இது வரை நடந்துள்ளது. உலகத்தின் போக்கு மாறிக் கொண்டு வருகின்றது. இவ்வித நடவடிக்கை பலகாலங்களாக நடைபெற்று வருகின்றது. என்ற போதிலும் உலகம் செல்லும் திசைக்கேற்ப எம்மால் மாற்றமடைய முடியாது. சரியான திசையிலே நாம் செல்ல வேண்டியது அவசியம்.
உலகிலே நீண்ட காலத்திற்கு பின் ஏறத்தாழ 2000 வருடங்களுக்குப் பின் ஒரு சந்ததி மீண்டும் தன்னை புதுப்பித்துக்கொண்டு தனது நாட்டை அடையாளம் கண்டு கொண்டுள்ளது. ஆனால் அந்த நாட்டை பெற்றுக்கொள்ள முன்னரே பல விளைவுகளை அந்த பழைய ஜாதியினர் அனுபவிக்க வேண்டியிருந்தது. அவர்கள் வேறு யாருமல்ல. தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரவேலர்களாவர். எந்த இஸ்ரவேலனை எவன் ஆசீர்வதிக்கிறானோ அவனுக்கே ஆசீர்வாதம் கிடைக்கும். எந்த இஸ்ரவேல் நாட்டை எந்த நாடுகள் அங்கீகரிக்கின்றதோ அந்த நாடுகள் ஆசீர்வதிக்கப்படும் என ஆபிரகாமுக்கு கட்டளை கிடைத்தது. அது முதற் கொண்டு இஸ்ரவேல் தேசம் பராக்கிர தேசமாக காணப்பட்டது. 2000 வருடங்களுக்கு முன் எப்போது இஸ்ரேலியர் தமது தேசத்திலிருந்து துரத்தப்பட்டார்களோ அந்நாளிலிருந்து ஏனைய ஜாதிகள் அவ்விடத்தில் ஆளுகை செய்தன ஆனால் இஸ்ரவேல் தேசமோ அந்நிய ஜாதியினரின் காலத்தில் ஒரு பலனையும் பெற்றுக் கொடுக்கவில்லை. மழை கூட பெய்யவில்லை. எப்போது ய+தர்கள் இஸ்ரேலர் தேசத்திற்கு மீண்டும் நுழைய கிடைத்ததோ அந்நேரத்திலிருந்து பல்வேறு உற்பத்திகள் பெருகத் தொடங்கின. உலகிற்கு அதிகமான பழ வகைகளை ஏற்றுமதி செய்கின்ற, ஆயுதங்களை ஏற்றுமதி செய்கின்ற நாடாக மாறிவிட்டது.
இஸ்ரேல் எனும் அரசு பற்றிய தவறான கருத்துக்கள் இந்த உலகத்திலே பரவலாக காணப்படுகின்றது. அவை ஒரு போதும் நன்மையான கருத்துக்களாக காணப்படவில்லை என்பதே வேதனைக்குரிய விடயங்களாக காணப்படுகின்றது. ஏன் இவ்விதமான கருத்துக்கள் காணப்படுகின்றது என்பதை தெளிவாக கூறவும் எவரும் எழும்பவில்லை. தமிழர்கள் தாயகத்தில் அழிவதை விட எங்கோ இஸ்ரேல் தாக்குதல் நடத்துகின்றது என்பதற்கு நீலிக் கண்ணீர் வடிப்பதற்கு முழு உலகும் தயாராக இருக்கிறது.
இலங்கை ராணுவம் பயன்படுத்துவதோ இஸ்ரேலிய ஆயுதங்களை. ஆனால் இஸ்ரேலின் போக்கை கண்டிக்க இலங்கை அரசு முயல்கிறது. இது என்ன மாய்மாலமா?அநேகமான ஆயுதங்களை இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு செய்து அதனை வைத்து பயங்கரவாதம் நடத்தும் அரசு இஸ்ரேலின் செயலை கண்டிக்கிறதாம். உண்மையிலேயே இலங்கையில் பயங்கரவாத செயலுக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து கிடைக்கும் போதை பொருட்களின் வியாபாரமே கேந்திரமாக காணப்படுவதாக அமெரிக்க உளவு நிறுவனங்கள் வேறு அறிவித்துள்ளது.
இனி இஸ்ரவேலுக்கு எதிராக யாருக்கு தங்களது பாதணிகளை விட்டெரிந்தார்களோ அவரது காலையே பிடிக்க முற்படுவார்கள்.
No comments:
Post a Comment